Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

யாழில் தாலிக்கொடி, மோதிரம் திருடிய பெண் கைது

கடந்த 18ஆம் திகதி, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்செழு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலி, தாலிக்கொடி, மோதிரம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த விடயமானது காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று (22) அச்செழு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, தாலி மற்றும் தாலிக்கொடியை விற்று வாங்கிய சங்கிலி மற்றும் தோடு, ஒரு தொகை பணம், உருக்கிய நிலையிலான தங்கம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிணற்றில் வீழ்ந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Suki

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – சாணக்கியன்

admin

இராணுவ சார்ஜன்ட் மேஜரொருவர் உறங்கிக்கொண்டிருந்த அறையிலேயே உயிரிழந்துள்ளாா்

Suki

Leave a Comment