Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – இரு சிறுவர்கள் படுகாயம்.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்றுடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 35 பேர் கைது!

Suki

நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் ஏன்

Suki

பலத்த எதிர்ப்பையடுத்து நிலாவரையில் இருந்து விலகிச் சென்றனர் தொல்லியல் திணைக்களத்தினர்!

admin

Leave a Comment