Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மின்சாரக் கட்டணம் குறைப்பு – அமைச்சர் அதிரடி

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலையை அமைச்சர் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

இதன்படி, தற்போதுள்ள அலகு 0-30 இற்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய அலகின் விலை ரூ.25 ஆக திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார்.

மேலும், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0-30 அலகுகள் பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகளைப் பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஹோட்டல் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 9% மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு கொழும்பு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Suki

இ.போ.ச புதிய பேரூந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாவிட்டால் பணிப்புறக்கணிப்பு!

Suki

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 43 வயது பெண் உட்பட 4 பேர் பலி!

admin

Leave a Comment