Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

சுற்றுலா செல்ல தயாரான இரு இளைஞர்கள் ரயிலில் மோதி உயிரிழப்பு.

சுற்றுலா செல்வதற்கு தயாரான இரு இளைஞர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ரயில் பாதையில் பயணித்த வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

வெயாங்கொட வதுருவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.ஏ.திவங்க என்ற 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையில், காலை சுற்றுலா செல்ல திட்டமிட்டு வதுரவ ரயில் நிலையத்தை நோக்கி ரயில் பாதை வழியாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரும் தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

நாடு திரும்பினார் பஷில்

Suki

அமைச்சுக்களை பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய சுதந்திர கட்சி தீர்மானம்!

Suki

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை : அதுவும் எத்தனை வருடத்திற்கு தெரியுமா..? அரசாங்கம் அறிவிப்பு

Suki

Leave a Comment