பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris-EG5’ கொரோனா வைரஸின் புதிய திரிபு அவுஸ்திரேலியாவிலும் வேகமாக பரவிவருகின்றது.
இந்நிலையில், இதுவரையில், அவுஸ்திரேலியாவில் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
‘Eris-EG.5’ என்பது கொவிட் 19 ஒமிக்ரான் வைரஸின் துணை வகை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய திரிபு முந்தைய திரிபுகளைவிட அதிக வீரியம் மிக்கதா என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் இந்த புதிய திரிபு வேகமாக பரவும் அபாயம்மிக்கது.
கொவிட் தொற்றுக்கான தடுப்பூசி பெறுவதில் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பின்னடைவு காணப்படுவதனால் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.