அமெரிக்காவில் தற்போது பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்தியவர்களையும் தாக்ககூடும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரசின் புதிய வகையான வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னைய வைரசினை விட வலுவானது எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் முன்னையை வைரஸ்களை விடஇந்த வைரஸ் கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.