Headline Headlines News இந்தியா இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவுக்கும் செல்கின்றார்.

இரு நாட்கள் இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் சவால்களை எதிர்கொள்வதற்காக இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமையவுள்ளது.

அத்துடன், நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை – இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் – மேலும் ஒருவர் பலி

Suki

புகையிரத கட்டணத்தில் திருத்தம்

Suki

இலங்கைக்காக ஏனைய நாடுகளுடன் செயற்பட தயார்! சீனா

Suki

Leave a Comment