Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பாணின் விலை குறைகிறது

பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

ஒரு பாணின் விலையை 100 ரூபா அல்லது அதற்கும் குறைவாகவே பேணுவதே தமது சங்கத்தின் ஒரே நம்பிக்கை.

அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் முயற்சியின் கீழ் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் பாணை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளோம்.

அரசாங்கம் தலையிட்டால் நிச்சயமாக 100 ரூபாவிற்கு ஒரு பாணை வழங்குவதுடன் ஒரு பணிஸ்ஸின் விலையில் 10 அல்லது 15 ரூபாவை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத் திகதிகள் அறிவிப்பு

Suki

அரசாங்கத்தின் செலவு ! 20ஆயிரம் கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்க நடவடிக்கை

Suki

தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் பலி

Suki

Leave a Comment