Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீPலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

இலங்கையில் 425 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

Suki

மஹிந்த, பசில் ஜூலை 28 வரை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை

Suki

244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Suki

Leave a Comment