Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

கனடாவுக்கு செல்ல முயன்றவருக்கு நேர்ந்த கதி

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் செல்லும் EK-653 – எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில் அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே போலி விசா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்

admin

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு லிந்துலையில் விழிப்பணர்வு ஊர்வலம்

Suki

ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பில் இன்று முன்னெடுக்கும் சத்தியாகிரகப் போராட்டம்!

Suki

Leave a Comment