Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

admin

தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர் – சாந்தி சாடல்

admin

முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி சுழியோடி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Suki

Leave a Comment