Headline Headlines News இலங்கை யாழ்ப்பாணம்

யாழில் சிக்கிய செல்போன் திருட்டுக்கும்பல்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில்,யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்தனர்.

யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்க புளியடியை சேர்ந்த 24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி பொது நூலக அடிக்கல் நாட்டு விழா

Suki

262 பில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு

Suki

இலங்கையில் இன்று கறுப்புப் போராட்டம் – மக்கள் அவதி

Editor2

Leave a Comment