Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக,சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம் ஒப்படைப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக,சந்தேகிக்கப்படும் இளைஞனின் சம்பவத்தில், ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸார் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடமையில் இருந்தார்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார்.

இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் குறித்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கு அனுமதி

Suki

குடும்ப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

admin

சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

admin

Leave a Comment