Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் விளையாட்டு

முதல் ரி20 போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி.

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முதலாவது Tரி-20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜகீர் அலி 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

2ஆவது போட்டி நாளை (6) நடைபெறவுள்ளது.

Related posts

வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா

admin

மீண்டும் இணைகிறார்கள் தனுஷ் – ஐஸ்வர்யா?

Suki

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து

Suki

Leave a Comment