Headline Headlines News இந்தியா இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

மீண்டும் இலங்கை கடல் பரப்பில் 32 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 07 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் மீனவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

IMF இடமிருந்து கடனைப் பெறுவது எளிதானது அல்ல – ஹர்ஷ டி சில்வா

Suki

மாரவில பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கு தடை

Suki

சூடுபிடிக்கவுள்ள நாடாளுமன்ற விவாதம்- கையளிக்கப்பட்டது நம்பிக்கையில்லா பிரேரணை!

Suki

Leave a Comment