Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் , உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த தொகை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும்.

இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரன் தெரிவு

admin

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

Suki

நாட்டில் 95.8% பேருக்கு தொற்றியுள்ள டெல்டா!!

Suki

Leave a Comment