Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பாடசாலை மாணவிகளுக்கான அறிவிப்பு.

எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் , பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நேற்றையதினம்(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும், ஒரு வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1200 ரூபா எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளை பலப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளிதழ் நேரம் | 16.07.2019

admin

பிரதமரினால் குருநாகலுக்கு அதிநவீன வைத்தியசாலை!

admin

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்

Suki

Leave a Comment