Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கைக்கு மீண்டும் கை கொடுக்கும் சீனா.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சீனா தொடர்ச்சியாக ஆதரவளிக்குமென சீன பிரதமர் Li Qiang இதன்போது தெரிவித்துள்ளார்.

பொருளாதார பின்னடைவின் பின்னர் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றத்தையும் சீன பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.

இதனிடையே, சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(27) அந்நாட்டின் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, பிரதமரின் விஜயத்திற்கு இணையாக சீனா மற்றும் இலங்கை இடையில் நேற்று(26) 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

Related posts

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

Suki

போதைப்பொருள் கடத்தல் 23 வயதான இளைஞன் உட்பட எட்டு பேர் கைது

Suki

இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு அடுக்குமாடி வீட்டுத்திட்டம்

admin

Leave a Comment