Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கொடூரம் – இளைஞனின் கையை துண்டாக வெட்டிய வாள்வெட்டுக் கும்பல்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.

செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

உறவினர்களிடையே ஏற்பட்ட வன்முறையில் வாள்களுடன் சென்ற குழுவொன்று நபரொருவர் மீது வாளால் வெட்டி கையை துண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

Suki

இன்றைய நாளை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்!

Suki

வவுனியாவில் கர்ப்பிணி பெண் மீது வாள்வெட்டு

Editor2

Leave a Comment