Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

அமைமச்சர் டக்ளசின் முயற்சியால் ,யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த வெளிச்சம்.

யாழ்ப்பாணம் ,நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த மின் பிறப்பாக்கியை சுன்னாகம் மத்திய மின்சார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , அதனை உடனடியாக நெடுந்தீவிற்கு எடுத்துச் சென்று சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

நெடுந்தீவில் மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கி வினைத்திறன் குறைவடைந்தமையினால் அண்மைய நாட்களாக பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டமையினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் எடுத்துவரப்பட்டுள்ள அதிசக்தி வலு கொண்ட புதிய மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்ட பின்னர் நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற முறையில் தொடர்ச்சியான மின்சாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் தவளை ஐஸ்கிறீம் 5000 ரூபாய் ?

Suki

வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

admin

பி.சி.ஆர். ஆய்வகம் செயற்பாட்டை ஆரம்பித்தது-பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்ட

Suki

Leave a Comment