Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் வெயில் கொடுமையால் மறறொருவரும் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.

அதேவேளை கடந்த வியாழக்கிழமை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும்!

Suki

ஆசிரியை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

Suki

பொடி மெனிகே புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி!

Suki

Leave a Comment