Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் போ_ தைப்பொருள் ஆய்வு கூடம் முற்றுகை.

யாழ்ப்பாணத்தில், ஐஸ் போ_ தைப்பொருள் ஆய்வுகூடமொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போ_ தைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஐஸ்போ_ தைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவளைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதான சந்தேக நபர் தப்பியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண ரீதியாக அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போராட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்!

Suki

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கருவள சிகிச்சை நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.

Suki

கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்றவர் பொலிஸாரினால் கைது!

admin

Leave a Comment