Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக உயர்த்தப்படும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம்(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று, சுற்றுலாப் பயணிகளால் மட்டும் நம் நாடு கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறது. மத்திய வங்கி கையிருப்பில் 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உள்ளது. இன்று நாட்டிற்கு எண்ணெய் கொண்டு வருவதற்காக மத்திய வங்கி 2196 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இப்போது நாடு ஸ்திரமாக உள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. நாடு முன்னோக்கி செல்லும் போது ஜே.வி.பி மற்றும் ஐ.ம.சக்தியின் அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்களா?

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். சம்பள முரண்பாடு குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். வரும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளம் கண்டிப்பாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியரின் வீட்டில் 57 பவுண் நகை கொ ள் ளை – குடுபத்தினர் தூங்கிய அ றை யை பூட்டிவிட்டு த ப் பியோட்டம் 

Suki

மாவிட்டபுரம் புகையிரதக் கடவையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Suki

எரிபொருளுக்காக வரிசையில் நிற்போருக்கு குளிர்பானம்

Suki

Leave a Comment