Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று காலை மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற சேடர்னா நிலையிலையே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் 7000 – 17000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன.அவர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது

அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கும்.2025 ஆகும் பொழுது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படும்.

நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது.ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும்.

மேலும் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட அறுவர் கைது..!

Suki

கோடி ரூபாய்களை அச்சிட்டு தள்ளும் இலங்கை

Editor2

அடைமழையால் மலையகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்; இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

Suki

Leave a Comment