Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் முல்லைத்தீவு

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (04) பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்,தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான எஸ்.ரட்ணவேல் , ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இன்றைய அகழ்வு நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக நாளை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கின்ற அகழ்வு பணிகளுக்கு முன்னாயத்தமான நடவடிக்கைகளே இன்று இடம்பெற்றிருந்தது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, நிதி ஒதுக்கீடு காலம் தாழ்த்தப்பட்டதன் காரணமாக தாமதம் ஏற்பட்டிருந்தது. இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய மனித எலும்புக்கூடு இருக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்ட இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

Suki

சஜித் – சரத் பொன்சேகா மோதல்

Suki

“மிகவும் அச்சமடையக்கூடிய அளவிற்கு கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல”

Suki

Leave a Comment