Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

அடுத்த பத்து நாட்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் எமக்கு கிடைக்கவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் அடுத்த பத்து நாட்களில் அதாவது ஜூலை 17ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்காக 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான பணிகள் முழுமையடைந்துள்ள அடுத்துவரும் சில நாட்களில் மாவட்ட ரீதியில் அவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதேநேரம் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றையதினம் மின்வெட்டு – அட்டவணை வௌியீடு

Suki

இலங்கையில் விரைவில் புர்கா தடை

admin

எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம்

Suki

Leave a Comment