இந்தியா

திருப்பூர் – தேவாங்கபுரம் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!

திருப்பூர் அருகே உள்ள தேவாங்கபுரம் நடுநிலைப் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கையில் போதுமான அக்கறை காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு 8ம் வகுப்பு வரை உள்ள பாடசாலையில் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சென்னையில் உள்ள அரசு பாடசாலைகளில் 90 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் பாடசாலைகளில் 80 சதவிகிதம் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தவறு – மு.க.ஸ்டாலின்

admin

மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதி தீவிரமாக மாறும் அபாயம்!

admin

இந்தியாவின் முதலாவது ரஃபேல் விமானத்துக்கு பிரான்ஸில் சாஸ்திர பூஜை!

admin

Leave a Comment