ஆன்மீகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன்

 • மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பிறரின்  குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
 • ரிஷபம்ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும் அசைவ,  கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொஞ்சம்சிக்கனமாக இருங்கள்.  வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.   
 • மிதுனம்மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளை களால் புகழ், கௌரவம் உயரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள்பலிதமாகும்.பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.  
 • கடகம்கடகம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். நம்பிக்கைக் குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்செயல்படுவார்கள்.உத்யோகத்தில்  உயரதிகாரிகள் உங்களை மதித்துபேசுவார்கள். மதிப்புக்கூடும் நாள். 
 • சிம்மம்சிம்மம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும்  நாள்.   
 • கன்னிகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். புது முதலீடுகளை  தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிகம் உழைக்க வேண்டிய நாள். 
 • துலாம்துலாம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்  வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிலும் போராடி வெல்லும் நாள்.   
 • விருச்சிகம்விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில்  உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.   
 • தனுசுதனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால்  லாபமடை வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.   
 • மகரம்மகரம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை  சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். 
 • கும்பம்கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண் டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்  கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.
 • மீனம்மீனம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியா பாரத்தில் நெளிவு, சுளிவுகளை  கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான நாள்.

Related posts

இன்றைய ராசிபலன்

admin

இன்றைய ராசிபலன்

admin

விருப்பங்களை நிறைவேற்றும் கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்

admin

Leave a Comment