மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய ஏனைய வழக்கு நடவடிக்கைகள் தாமதமடைவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமே பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது.
இந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனவே, சட்டமா அதிபர் திணைக்களமே வழக்கு தொடர வேண்டும் என சுமநதிரன் குறிப்பிட்டுள்ளார்.