களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இறுதி பரீட்சைக்கு முகம் கொடுத்தவர், பெறுபேறுகளுக்காக வீட்டில் காத்திருந்தார்.
இந்நிலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பகுதியை சேர்ந்த லசந்தா வீரக்கொடி என்ற 24 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் ஒரே மகளான அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் வீட்டின் சுமைகள் அனைத்தையும் குறைத்து விடுவேன் என குறிப்பிட்டார் என்று உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட விடயம் அறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் அவரது இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.