Uncategorized

பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் விமானி அபினந்தனின் தந்தையின் உருக்கமான அறிவிப்பு

எனது மகன் குறித்த தகவல்களை பற்றி கூறும் நிலையில் இல்லாததால் தயவு செய்து எங்களை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய விமானி அபினந்தனின் தந்தை மீடியாக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவை சேர்ந்த மிக்-21 ரக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்து குதித்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார்.
கைதான விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. விமானி அபினந்தன் சென்னை, தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றவர்.

2004ம் ஆண்டு முதல் இந்திய விமானியாக பணியாற்றி வருகிறார். இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் சென்னையில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது தந்தை வர்தமான் விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றியவர்.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது சென்னை, சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள ஜல்வாயூ விஹார் இல்ல கேட்டை அபினந்தனின் பெற்றோர்கள் பூட்டி விட்டனர்.
இதுகுறித்து அபினந்தனின் தந்தை வர்தமான், விங் கமெண்டரான எனது மகன் பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

அதுகுறித்து பேசும் மனநிலையில் நாங்கள் தற்போது இல்லை. ஆகையால் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என எழுதி அவர் கேட்டில் மாற்றி உள்ளார்.

இந்திய தமிழ் ராணுவ வீரரை விமானத்துடன் சிறைபிடித்து அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோ
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புல்வா தாக்குதலுக்கு அடுத்து தற்போது பலத்த போர் உருவாகியுள்ளது. மேலும் இருநாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

நேற்று அதிகாலை இந்திய ராணூவம் புல்வா தாக்குதலுக்கு பதிலடியாக 1000 கிலோ எடை கொண்ட குண்டை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் வீசி 200க்கும் மேற்பட்டவர்களை அழித்தனர்.இந்நிகழ்வை அடுத்து இருநாடுகளுக்கிடையும் போர் முற்றியது.
இந்நிலையில் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி தரும்வகையில் பாகிஸ்தான் தற்போது இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் என்பவரை தற்போது விமானத்துடன் பாகிஸ்தான் சிறை பிடித்துள்ளது.மேலும் இவர் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.இவ்வாறு இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Suki

வட. மாகாணத்தில் தமிழ் கொலை!

admin

வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகக்கூடும் என எதிர்வு கூறல்!

admin

Leave a Comment