பாகிஸ்தான் சிறை பிடித்துள்ள இந்திய விமான படையின் வின் கமாண்டர் சென்னை அபிநந்தனை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளின் அழுத்தங்கள் நேற்று முதல் அதிகரித்து வருகின்றன. சற்று முன்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரிகள் மற்றும் அரச உயர் மட்டம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரம் 7 நாட்களுக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஆனாலும் நாளை அல்லது நாளை மறுதினம் International Red Cross சர்வதேச செஞ்சிலுவை யின் ஊடாக விடுதலை செய்யப்படுகின்றார்.
International Red Cross Society யிடம் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக அபிநந்தனை கையளிப்பார்கள்.
ரெட் க்ரோஸ் அபிநந்தனை விமான மூலமாக இந்தியா கொண்டுவந்து இந்திய அரசிடம் / மாவட்ட ஆட்சியர் / இந்திய வான்படை /இந்திய உள்துறை அமைச்சிடம் /பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கலாம்.
அனேகமாக அபிநந்தனை சென்னை தாம்பரம் விமானப்படை யிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் டெல்லியில் வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஒப்படைக்கும் நிலை வந்துள்ளது.
அதன் பின்னர் அபிநந்தன் இந்திய ராணுவ வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனை மற்றும் ராணுவ கேள்விகள் மற்றும் பல போமல்டி முடிந்த பின்னர் சென்னை வருகின்றார்.
அபிநந்தனுக்கு சென்னையில் மாபெரும் வரவேற்பு காத்திருக்கின்றன.
அபிநந்தன் மீது வன்முறை கும்பல் தான் தாக்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் நல்ல முறையில் கௌரமாக நடத்தியுள்ளது.