இந்திய எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்நாட்டின் முப்படைகளின் தளபதிகள் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
புல்வாமா தாக்குதல் சம்பவம் முதலாக இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் போர் விமானங்களை வான் வழித் தாக்குதலைக் கொண்டு இந்தியா முறியடித்து வருகிறது.
இந்த முறியடிப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தான் வசம் இந்திய விமான படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் அவரை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முப்படைகளின் தளபதிகளும் இன்று மாலை டெல்லியில் 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.
அவர்கள் போர் பதற்றம் குறித்தும் அபிநந்தன் குறித்தும் விவரிப்பர் என தெரிகிறது.
வெளியுறவு தொடர்பான நாடாளுமன்றக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் பற்றி இந்திய அரசு விளக்க திட்டமிட்டுள்ளது.