Uncategorized

சிறுமிக்கு பாலியல் தொல்லை – கைதான தென் மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின தென் மாகாண சபையின் உறுப்பினர் கிரிஷாந்த புஸ்புகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் காலி பிரதான நீதவான் ஹர்ஷ கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது 25 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மாகாண சபை உறுப்பினர் இன்று காலை சட்டத்தரணி ஊடாக அக்மீமன காவல்துறையில் சரணடைந்த வேளை கைது செய்யப்பட்டார்.

கடந்த 26 ஆம் திகதி 16 வயதான சிறுமியொருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை ஏப்பிரல் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் திடீர் மாற்றம்!

Suki

கொடூரத்தாய்க்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை!

admin

சுதந்திர தினத்தன்று போராட்டம்

Suki

Leave a Comment