அழகு குறிப்பு ஆரோக்கியம்

பருக்கள், சுருக்கம், கருமை போன்றவற்ற எளிதில நீக்க வேண்டுமா? இவற்றை பின்பற்றினாலே போதும்

பொதுவாக வெயிற்காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள், கட்டிகள், கிருமி தொற்றுகள் உண்டாகின்றது.

இதனால் சரும நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது.குறிப்பாக தேமல், படை, கரப்பான், சொரியாசிஸ், உடலில் நிறம் மாறுபாடுகள் உண்டாகின்றன.

எனவே நாம் சருமங்களையும் மற்றும் முகங்களையும் பராமரித்து கொள்வது அவசியமாகும்.

இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் பெரிதும் உதவி புரிகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 • ஓட்ஸ் 2 ஸ்பூன் எடுத்து இரவு குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை எடுத்து அரைத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து சுத்தமான நீரினால் கழுவிக் கொள்ளவும்.
 • உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து தோல் நீக்கி விட்டு அரைத்து பாதம் எண்ணெய் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.
 • தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வரவேண்டும். இதனால் முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.
 • ஆரஞ்சு தோலை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு இதில் 2 ஸ்பூன் பொடியுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவிவர முகம் பளபளப்பாக மிகவும் பொலிவுடன் இருக்கும்.
 • 10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
 • வாழைப்பழம் 1 எடுத்து 1 கப் தயிரில் கலந்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.
 • தேனுடன் சமபங்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கிவிடும்.
 • வெள்ளரிபிஞ்சை அரைத்து முகத்தில் பூசி பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.
 • கடலைமாவு 2 ஸ்பூனுடன் பால் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பசையுடன் முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும்.
 • மஞ்சள்தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண் ணெயுடன் ஒன்று சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவ தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.
 • ஆரஞ்சு பழச்சாறு உடலில் தடவிவர தோல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.
 • தக்காளியை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொண்டு வந்தால் முகம் பளபளப்புடன் பொலிவுடன் இருக்கும்.

Related posts

ஒருவர் திடீரெனஉடல் எடையை குறைத்தால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா

admin

பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்க தீர்மானம்

admin

12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer)  கொவிட் 19 தடுப்பூசிகள்

Suki

Leave a Comment