இலங்கை

அரசாங்கத்திற்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாடு தற்போதுள்ள நிலைமையில் எரிபொருள் விலையேற்றம் அநாவசியமான ஒன்றாகும். அமைச்சரவையில் ஒரு கருத்தைக் கூறுபவர்கள் ஊடகங்களிடம் பிரிதொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான இரட்டை கொள்கையை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்களை வலியுறுத்துவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்து , கோபம் அதிகரிக்கும் வகையில் செயற்பாடாது. மக்களின் விருப்பங்களை அறிந்து செயற்படுவதிலேயே இந்த அரசாங்கத்தின் ஆயுள் தங்கியுள்ளது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டினார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

எரிபொருள் விலையேற்றம் நாடு தற்போதுள்ள நிலைமையில் அநாவசியமான ஒன்றாகும். கடந்த அரசாங்கங்களிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தைப் போன்று எவரும் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை.

இவ்வாறிருக்க தற்போது எரிபொருள் விலையை அதிகரித்தவரும் இல்லை , அதனை அறிவித்தவரும் இல்லை , அதனை நடைமுறைப்படுத்துபவரும் இல்லை. இதனால் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள். இது அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு தனித்து செய்யக் கூடிய விடயமல்ல.

அமைச்சரவையில் ஒன்றைக் கூறுகின்றனர். வெளியில் வந்து ஊடகங்களிடம் பிரிதொன்றைக் கூறுகின்றனர். இதனையா கொள்கை என்று கூறுவது ? இவ்வாறான இரட்டை கொள்கையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.

அநாவசியமாக மக்களை வெறுப்படையச் செய்து , கோபம் அதிகரிக்கும் வகையில் செயற்பாடாது , மக்களின் விருப்பங்களை அறிந்து செயற்படுவதிலேயே இந்த அரசாங்கத்தின் ஆயுள் தங்கியுள்ளது.

மக்களின் கோபத்திற்கு உள்ளாகாமால் சிந்தித்து செயற்பட வேண்டும். யாதார்த்தத்தை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே எம்மால் முன்னெறே முடியும். தற்போது செல்லும் பாதை அறியாமல் இடை நடுவில் நின்று கொண்டுகின்றோம். இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும் என்றார்.

Related posts

வீதி ஓரத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

admin

மதுபோதையவில் வாகனம் செலுத்தியதாக கண்டறியப்பட்டால், சாரதி அனுமதி உரிமம் இரத்து செய்யப்படும்

Suki

மஸ்கெலியா பிரதேசசபையில் இடம்பெரும் மோசடிகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

Suki

Leave a Comment