இலங்கை ராசிபலன்

இன்றைய ராசி பலன் (24.09.2021)

மேஷம்

பொதுப்பலன்கள்:
இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டதாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் பல ஆச்சரியங்களைப் புரிவீர்கள். ஆன்மீக காரியங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.

வேலை / தொழில்:
பணிச்சூழல் சாதகமான பலன்களைக் கொடுக்கும். பணிகளைப் பொறுத்தவரை நீங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மேஷம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் மனதில் மிகுந்த திருப்தி காணப்படும். உங்கள் துணையுடன் சாதாரணமான அணுகுமுறை கடைபிடிப்பீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று பணவரவு அதிகமாக காணப்படும். இருக்கும் பணத்தை பங்குகளில் முதலீடு செய்து பயனடையலாம்.

ஆரோக்கியம்:
ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைவீர்கள். திருப்தியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ரிஷபம்

பொதுப்பலன்கள்:
இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் செயல் திறன்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இன்றைய தினம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

வேலை / தொழில்:
உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்கள் பணிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடனான அணுகுமுறையில் நேர்மையுடன் காணப்படுவீர்கள். இருவரும் ஒன்றாக நேரத்தை நல்ல முறையில் கழிப்பீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று பணவரவு அதிகமாக இருக்கும். இன்று சேமிக்கவும் செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும்.

ஆரோக்கியம்:
உங்கள் தைரியம் மற்றும் திருப்தியான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மிதுனம்

பொதுப்பலன்கள்:
இன்று மிகுந்த செயல்பாடுகள் காணப்படாது. சவாலான நேரங்களில் பதட்டப்பட நேரிடும் என்பதால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய கவலை இருக்கும்.

வேலை / தொழில்:
பணிச்சூழலில் ஸ்திரத்தன்மை காணப்படாது. இதனால் உங்கள் பணிகளை திறமையுடன் கையாள முடியாது. சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.

காதல் / திருமணம்:
உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படையாக கூற இயலாது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான உற்சாகமான மனநிலை உங்களிடம் காணப்படாது. தேவையற்ற மனஉளைச்சல்கள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.

பணம் / நிதிநிலைமை:
பணத்தட்டுப்பாடு காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக பணத்தை சேமிக்க இயலாத நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

கடகம்

பொதுப்பலன்கள்:
இன்று உறுதியான முடிவுகள் கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். அது உங்களுக்கு கவலையைத் தரும். அமைதியுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

வேலை / தொழில்:
கடுமையான பணிச்சுமை சவாலாக இருக்கும்.அத்தகைய சூழ்நிலைகளை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.அதிக வேலை காரணமாக களைத்துப் போவீர்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் எளிதான அணுகுமுறை தேவை. உங்களுக்கும் உங்கள் துணையாருக்கும் இடையே பிளவு இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள்.எனினும் நெருக்கமான பிணைப்பை வளர்ப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம் / நிதிநிலைமை:
பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். பண இழப்பிற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

ஆரோக்கியம்:
உங்கள் தாயின் உடல் நிலை உங்களுக்கு கவலை அளிக்கும். சூடு சம்பந்தமான பிரச்சனைகளால் உங்கள் தாயார் பாதிக்கப்படலாம்.

சிம்மம்

பொதுப்பலன்கள்:
இன்று சுமூகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வேலை / தொழில்:
உங்கள் பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடித்துவிடுவீர்கள்.அதனால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையிடம் நேர்மை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் மகிழ்ச்சியும் நல்ல புரிந்துணர்வும் ஏற்படும்.

பணம் / நிதிநிலைமை:
பணவளர்ச்சிகாணப்படுகின்றது. பாதுகாப்பான வளமான நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.

ஆரோக்கியம்:
மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும்.உங்களிடம் காணப்படும் உயர்ந்த ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கன்னி

பொதுப்பலன்கள்:
இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்கள் மூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று பிரகாசமான நாள்.

வேலை / தொழில்:
உங்கள் செயல்பாட்டிற்காக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். செய்வதற்கு அரிதான பணிகளையும் நீங்கள் எளிதில் செய்து முடிப்பீர்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் ஆழ்ந்த ஒட்டுதலை உண்டாக்கிக் கொள்வீர்கள். உங்கள் துணையாரும் நேர்மையுடன் நடந்து கொள்வார்.நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு முக்கியமான முடிவு எடுப்பீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
உங்களுக்கு பயனளிக்கத்தக்க முதலீடுகளை செய்வதற்கு இன்று உகந்த நாள்.இன்று அதிக அளவு பணம் காணப்படும். பணத்தை சேமிப்பீர்கள்.

ஆரோக்கியம்:
உங்களது மகிழ்ச்சியான மனநிiலை காரணமாக இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

துலாம்

பொதுப்பலன்கள்:
இன்று உங்கள் செயல்களை முறையாக திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். இன்று தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தால் எந்தவொரு முடிவையும் யோசித்து எடுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

வேலை / தொழில்:
பணிநிமித்தமான பயணங்கள் காணப்படும். உங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.மகிழ்ச்சியை தக்க வைக்க இத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது.

பணம் / நிதிநிலைமை:
இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். இன்று சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஆரோக்கியம்:
பற்களில் வலி வருவதற்கு வாய்ப்புள்ளதால் அதில் கவனம் செலுத்தி மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம்

பொதுப்பலன்கள்:
இன்றைய தினம் உறுதியான பலன்கள் கிடைக்காது.அசாதாரணமான சூழ்நிலையை தவிர்க்க நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் பொழுது உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்.

வேலை / தொழில்:
திறமையாக பணியாற்றுவதற்கு தடைகள் காணப்படும். சகபணியாளர்களுடன் சுமூகமான உறவு காணப்படாது.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்கவும்.

பணம் / நிதிநிலைமை:
இன்று தவிர்க்கமுடியாத செலவினங்கள் காணப்படுகிறது. எனவே உங்கள் செலவினங்களை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவினங்களும் ஏற்படலாம்.

ஆரோக்கியம்:
முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கண்களுக்கு மருத்துவம் மேற்கொள்வது நல்லது. வேலையின் காரணமாக நீங்கள் களைத்துப் போவீர்கள்.

தனுசு

பொதுப்பலன்கள்:
இன்று சாதகமான நாளாக அமையும். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் செயல்களில் எளிதாக வெற்றி அடைவீர்கள்.பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

வேலை / தொழில்:
பணியில் உங்கள்; நிலையில் வளர்ச்சி காணப்படும். வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அவை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான விழா தொடர்பாக உங்கள் துணையுடன் பயனுள்ள விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள்.உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.

ஆரோக்கியம்:
திடமான தேக ஆரோக்கியம்; காணப்படும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மகரம்

பொதுப்பலன்கள்:
இன்று அதிக சிந்தனைவயப்பட்டவர்களாக இருப்பீர்கள். விஷயங்களை சாதாரணமாக எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.

வேலை / தொழில்:
பணிநிமித்தமான பயணங்கள் காணப்படும்.பணியில் நிறைய சவால்களை சந்திக்க நேரும்.கடுமையான வேலை காரணமாக சோர்ந்து காணப்படுவீர்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடனான தொடர்பாடலின் பொழுது பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு உங்கள் அகந்தை போக்கு காரணமாக இருக்கலாம்.எனவே, அத்தகைய நடத்தையை தவிர்க்க வேண்டும்.

பணம் / நிதிநிலைமை:
பண அதிர்ஷ்டம் இன்று பிரகாசமாக இல்லை.தொலை தூரப் பிரதேசத்திலிருந்து நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் கிடைக்க தாமதமாகலாம்;.

ஆரோக்கியம்:
மனஅழுத்தம் காரணமாக கால்களில் வலி ஏற்படலாம். அதிக வேலையின் காரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கும்பம்

பொதுப்பலன்கள்:
இன்று உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படும். எனவே இன்றைய நாளை நீங்கள் சிறப்பாகத் திட்டமிடலாம். உங்கள் திட்டங்களை செயறலாற்றத் தொடங்குவதற்கு இன்று மிகச் சரியான நாள்.

வேலை / தொழில்:
உங்கள் தொழில் சம்பந்தமான பயணம் காணப்படும். உங்கள் தகவல் பரிமாற்றத் திறமை காரணமாக நீங்கள் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

காதல் / திருமணம்:
இன்று உறவு நிலை சாதாரணமாக காணப்படும்.உங்கள் துணையுடன் வெளிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலைமை சிறப்பாக உள்ளது. பயனுள்ள சிறு சிறு செலவுகளை மேற்கொள்வீர்கள். அழகுப் பராமரிப்பு, மருந்து வாங்குதல் போன்றவற்றிற்கு செலவு செயவீர்கள்.

ஆரோக்கியம்:
இன்று முழுமையான ஆரோக்கியம் காணப்படும். நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இன்றயை நாளின் முடிவில் தலைவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மீனம்

பொதுப்பலன்கள்:
இன்று மகிழச்சியும்; சந்தோஷமும் நிறைந்து காணப்படும். நிலுவையிலுள்ள பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். இன்று ஆன்மீக அனுபவங்களைக் கண்டு மகிழலாம்

வேலை / தொழில்:
உங்கள் பணி சிறப்பாக இருக்கும் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் அமைதிகரமாக இருக்கும் எளிதாகப் பணியாற்ற முடியும்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்த்தை கழிப்பீர்கள்.அவர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.என்றாலும் இனிமையற்ற வார்த்தைகளைப் பேசாதீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். உங்கள் குடும்பத்திற்கென பணம் செலவு செய்வீர்கள். இன்று கவனமாக பணம் செலவு செய்ய வேண்டும்.

ஆரோக்கியம்:
இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருககும்;. நீங்கள் இன்று முழுவதும் சிறப்பான ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

Related posts

நாட்டில் தீராத முட்டை விலைப் பிரச்சினை

Editor2

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன !

admin

சுற்றுலா பயணிகளிடமிருந்து சமூகத்திற்கு தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

admin

Leave a Comment