இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் ராசிபலன்

இன்றைய ராசி பலன் (28.09.2021)


பொதுப்பலன்கள்:
இன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க இயலும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். நீங்கள் எதையோ சாதித்ததபோல உணர்வீர்கள்.

வேலை / தொழில்:
கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். உங்களுள் இருக்கும் திறமைகளை பணியிடத்தில் வெளிபடுத்துவீர்கள்.

காதல் / திருமணம்:
உங்களின் நேர்மையான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்தப் போக்கின் காரணமாக உறவின் பிணைப்பு வலுப்படும். மனம் திறந்து பேசுவதன் மூலம் இருவரிடையே இருக்கும் இடைவெளி குறையும்.

பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஊக்கத் தொகை வகையில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.உங்கள் சேமிக்கும் ஆற்றல் உயரும்.

ஆரோக்கியம்:
உங்கள் திடமான மனது மற்றும் உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம்

பொதுப்பலன்கள்:
இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற இயலாத நிலை காணப்படும். இன்று சோம்பலும் மந்தத் தன்மையும் காணப்படும்.

வேலை / தொழில்:
இன்று கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்க இயலாத நிலை காணப்படும். பணிகள் அதிகமாக காணபப்டுவதே இதற்கு காரணமாக இருக்கும். எனவே பணிகளை திட்டமிட்டு முறையாக கையாள வேண்டும்

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படாது. புரிந்துணர்வின்மை காரணமாக தேவையற்ற கருத்து வேறுபாடு எழும்.

பணம் / நிதிநிலைமை:
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்காது. இதனால் கூடுதல் பணம்சம்பாதிக்கும் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். சிறிய அளவில் பண இழப்பும் காணப்படுகின்றது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும.

ஆரோக்கியம்:
பருவநிலை மற்றும் ஒவ்வாமை காரணமாக தொண்டை சம்பந்தமான உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

பொதுப்பலன்கள்:
உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் காரணமாக இன்று சிறிது அமைதியின்மை காணப்படும். இது உங்கள் முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும்.

வேலை / தொழில்:
உங்கள் பணிகளை ஆற்றும் போது கவனம் தேவை. இல்லாவிடில் தவறுகள் நேர வாய்புள்ளது. இது சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் தவறான புரிந்தணர்வு காணப்படும். இதனால் வாக்கு வாதங்கள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது.

பணம் / நிதிநிலைமை:
இன்று பணஇழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. திட்டமிடலின்மை காரணமாக நீங்கள்சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியம்:
இன்று உங்களால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க இயலாது. தோள் அல்லது கணுக்கால் வலி காணப்படும்.

கடகம்

பொதுப்பலன்கள்:
இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.

வேலை / தொழில்:
உங்கள் சக பணியாளர்களிடமிருந்து சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். காரணமேயில்லாமல் அவர்கள் உங்கள் மீது பழி போடுவார்கள். இது உங்கள் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் தேவையற்ற தவறான புரிந்துணர்வு கொள்வீர்கள். இதனை மாற்றிக் கொள்வது சிறந்தது.

பணம் / நிதிநிலைமை:
இன்று பணபுழக்கம் குறைந்து காணப்படும் அதிர்ஷ்டமும் குறைந்து காணப்படும். எனவே உங்கள் செலவுகளை முறையாக திட்டமிட்டு செய்யவும்.

ஆரோக்கியம்:
அதிக வெப்பம் காரணமாக தோலில் எரிச்சல் ஏற்படும். இதனால் அசௌகரியமாக உணர்வீர்கள்.

சிம்மம்

பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நல்ல மனநிலையில் காணப்படுவீர்கள். நல்லது நடக்கும் என்ற உணர்வுடன் இருப்பீர்கள்.

வேலை / தொழில்:
உங்கள் பணியில் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இந்தப் போக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு காணப்படும்.

பணம் / நிதிநிலைமை:
இன்று உங்களுக்கு ஊக்கத்தொகை போன்ற வகையில் கூடுதல் பணம் கிடைக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு உயரும்.

ஆரோக்கியம்:
உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

பொதுப்பலன்கள்:
இன்று அமைதியின்மை காரணமாக உங்களிடம் உறுதியும் தைரியமும் குறைந்து காணப்படும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். உங்கள் இலக்குகளை அடிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வேலை / தொழில்:
இன்று உங்கள் பணயில் சிக்கல்கள் காணப்படும் என்பதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். இது மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்ல வாய்ப்பிருப்பதால் கவனம்

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இதனால் இடைவெளி உண்டாகும். எனவே நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

பணம் / நிதிநிலைமை:
இன்று செலவுகள் அதிகமாக காணாப்படும். பணம் இன்று குறைவாக இருபதால் நீங்கள் முறையாக திட்டமிட இயலாது.

ஆரோக்கியம்:
இன்று பதட்டத்துடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

துலாம்

பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். எனவே இன்று சகஜமாக இருக்க வேண்டும். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக ஆக்கலாம்.

வேலை / தொழில்:
பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள். என்றாலும் சில கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைய இயலாது.

காதல் / திருமணம்:
உங்கள் துணை உங்கள் அன்பை சரியாக புரிந்து கொள்ள மாட்டார். நீங்கள் உங்கள் அன்பில் நேர்மையாக இருந்தாலும் அதனை உங்கள் துணை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்.

பணம் / நிதிநிலைமை:
இன்று உங்களால் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. எனவே சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். கடன் வாங்குவதற்கான சாத்தியம் உள்ளது.

ஆரோக்கியம்:
ஒவ்வாமை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்படலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

விருச்சிகம்

பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் கடினமாக இருக்கும். உங்களிடம் பதட்டம் காணப்படும். பிரார்தனை மற்றும் வழிபாடு சிறந்த பயனளிக்கும்.

வேலை / தொழில்:
பணிகள் அதிகமாகவும் நேரம் குறைவாகவும் காணப்படும். இதனால் உங்களுக்கு பதட்டம் உண்டாகும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் தேவையற்ற சண்டைகள் ஏற்படும். கருத்து வேறுபாடு ஏற்படாமல் தடுக்க அவருடன் அனுசரித்து செல்வது சிறந்தது.

பணம் / நிதிநிலைமை:
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் லட்சியம் அவ்வளவு எளிதானதல்ல. பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகள் காரணமாக நீங்கள் பணத்தை பராமரிக்க இயலாது.

ஆரோக்கியம்:
பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படலாம். பிரார்த்தனை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

தனுசு

பொதுப்பலன்கள்:
நீங்கள் இன்று விரைந்து பணியாற்றுவீர்கள். கடினமான பணிகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைந்து திருப்தியடைவீர்கள்.

வேலை / தொழில்:
பணியிடச் சூழல் சுமூகமாக இருக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். இதன் மூலம் பணியில் சாதிப்பீர்கள்.

காதல் / திருமணம்:
இன்று பக்குவமும் புரிந்துணர்வும் கொண்டதன் காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
உங்களின் முயற்சி காரணமாக இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள். கணிசமான தொகை சேமிப்பீர்கள்.

ஆரோக்கியம்:
பக்தியும் பிரார்தனையும் உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மகரம்

பொதுப்பலன்கள்:
நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதனை பொறுப்புடன் செய்வீர்கள். இதனால் வளர்ச்சியும் வெற்றியும் எளிதாகப் பெறுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

வேலை / தொழில்:
உங்கள் பணிகளை சாமர்த்தியமாக செய்வீர்கள்.தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொண்டு நல்லுறவை ஏற்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

பணம் / நிதிநிலைமை:
இன்றைய நாளை அதிக முயற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்:
இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

பொதுப்பலன்கள்:
இன்று சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் பொறுமையும் மன உறுதியும் அவசியம். சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நேர்மறையான எண்ணங்கள் அவசியம்.

வேலை / தொழில்:
உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நல்லுறவு பராமரிக்க முடியாது. மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிறிது குழப்பம் ஏற்படும்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. இதனால் நல்ல மன நிலையும் புரிந்துணர்வும் காணப்படும்.

பணம் / நிதிநிலைமை:
இன்றி நிதிநிலை சாதகமாக இருக்காது. இன்று அதிகரிக்கும் செலவுகள் காரணமாக நீங்கள் கடன் வாங்க நேரலாம்.

ஆரோக்கியம்:
மனக் குழப்பம் காரணமாக ஆரோக்கியக் குறைபாடு காணப்படும். கால் வலி மற்றும் கணுக்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்

பொதுப்பலன்கள்:
இன்று சிக்கல் நிறைந்த நாளாக காணப்படும். வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனால் இன்று ஏமாற்றங்களும் நிறைந்து காணப்படும்.

வேலை / தொழில்:
உங்கள் சக பணியாளர்களிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். உங்கள் வளர்ச்சி குறித்து அவர்கள் சிறிது பொறாமைப்படுவார்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் சமூகமான உறவு காணப்படாது. நல்லுறவை பராமரிக்க சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

பணம் / நிதிநிலைமை:
இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். சேமிப்பு குறைந்து காணப்படும். இன்று நிதி குறித்த எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

ஆரோக்கியம்:
உயரழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Related posts

கொரோனா பாதித்த மனைவியை கொன்று விட்டு அடுத்த திருமணத்திற்கு தயாரான கணவர்

Suki

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 56 பேர் உட்பட வடக்கில் 76 பேருக்கு தொற்று

Suki

வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் காரணமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில்.

Suki

Leave a Comment