உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,926பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 926பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 44இலட்சத்து 50ஆயிரத்து 777பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 679பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45ஆயிரத்து 891பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 129பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 42இலட்சத்து 77ஆயிரத்து 207பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related posts

கடதாசி அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ள இலங்கை மத்திய வங்கி

Suki

சுகாதார பணியாளர்களுக்கு வாராந்தம் எரிபொருள் வழங்க நடவடிக்கை

Suki

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம்

Suki

Leave a Comment