Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

கடும் வெப்பத்துக்கு மத்தியில்,யாழ்ப்பாணத்தில் சிறிய மழை.

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று(12) அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பலத்த காற்று வீசிய சமயம் சங்கானை 07 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் நின்ற பனை மரம் திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால், இரு மின் கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருளுக்காக வரிசையில் நிற்போருக்கு குளிர்பானம்

Suki

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் முன்னெடுப்பு

admin

54 வகையான மருந்துகள் ,பங்களாதேசிலிருந்து இறக்குமதி

Suki

Leave a Comment