Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

வடக்கில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (13) நண்பகல் 12.10 அளவில் குமுழமுனை, முறிகண்டி, கேரிதமடு மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

மட்டக்களப்பு – சிறிதளவில் மழைபெய்யும். கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். காலி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரானவானிலை. கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். திருகோணமலை – சிறிதளவில் மழை பெய்யும். மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

Related posts

மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Suki

புகலிடம் கோரி தமிழகம் சென்ற மேலும் 18 பேர்

Suki

கொழும்பு – கொம்பனி தெரு வீதியில் கடும் வாகன நெரிசல்.

Suki

Leave a Comment