இலங்கை

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பில் கனடா – யுக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கான வழிகள் தொடர்பில் கனடா மற்றும் யுக்ரைன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

தொலைபேசி ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள உக்ரைன் வெளிவிவகார அமைச்சர், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை கனடா அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனடா சகல விதங்களிலும் யுக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யுக்ரைனில் இருந்து நேற்றைய தினம் சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யக்ரைனின் துணைப் பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எனினும் மக்களை வெளியேற்றும் 3 வழிகளில் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

குறித்த பகுதிகளில் ரஷ்யாவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையை ரஷ்யா மறுத்துள்ளது.

இதேவேளை, இந்த மோதல் பொது மக்கள் மீது பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிதியுதவியை அதிகரிப்பதற்காக மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுகாதார வழிகாட்டுதல்களில் தளர்வு

Suki

இன்று 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

Suki

யாழில் தாலிக்கொடி, மோதிரம் திருடிய பெண் கைது

Editor2

Leave a Comment